196 பேருக்கு கொரோனா தொற்று!! - Yarl Thinakkural

196 பேருக்கு கொரோனா தொற்று!!

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் உள்ள மேலும் 196 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2350 ஆக அதிகரித்துள்ளது.
 
இதுவரை கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் 252 கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் இது வரை 1979 பேர் பூரணமாகக் குணமடைந்து வீடுகளுக்குச் சென்றுள்ள தாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது, 360 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் இதுவரை 11 கொரோனா நோயாளர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post