வாள், கோடரிகளுடன் வீட்டுக்குள் புகுந்த கும்பல்!! -யாழ்.மூளாய் பகுதியில் 17 பவுன் நகை கொள்ளை- - Yarl Thinakkural

வாள், கோடரிகளுடன் வீட்டுக்குள் புகுந்த கும்பல்!! -யாழ்.மூளாய் பகுதியில் 17 பவுன் நகை கொள்ளை-

யாழ்.மூளாய் பகுதியிலுள்ள வீடு ஒன்றில் இன்று செவ்வாய் கிழமை அதிகாலை 1.45 மணியளவில் ஆயுதங்களுடன் நுழைந்த கொள்ளைக் கும்பல் அங்கிருந்தவர்களை அச்சுறுத்தி தங்க அபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளது.

இதன்போது சுமார் 16 1ஃ2 பவுன் தங்கம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் தெரிவித்தனர்.

வாள் மற்றும் கோடரிகளுடன் வீட்டினுள் நுழைந்த 6 பேர் கொண்ட கும்பலே வீட்டில் உள்ளவர்களை அச்சுறுத்தி கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

குறித்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Post a Comment

Previous Post Next Post