காணாமல் போன 14 வயது சிறுவன்!! -விட்டிலிருந்து கடைக்குச் சென்ற போது சம்பவம்- - Yarl Thinakkural

காணாமல் போன 14 வயது சிறுவன்!! -விட்டிலிருந்து கடைக்குச் சென்ற போது சம்பவம்-

வவுனியா மாவட்டத்தில் உள்ள சாம்பல் தோட்டம் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவனை காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சாம்பல் தோட்டம், தம்பனை புளியங்குளம் பகுதியில் தனது உறவினர்களுடன் வசித்து வந்த 14 வயதுடைய விஜேந்திரன் பிரசாத் என்ற சிறுவன் நேற்று உறவினர் வீட்டில் இருந்து கடைக்கு சென்ற நிலையில் வீடு திரும்ப வில்லை.

இதனையடுத்து குறித்த சிறுவனை இரவு வரை தேடிய உறவினர்களும், அயலவர்களும் சிறுவன் கிடைக்காமையால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இது தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post