14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 21 இளைஞன்!! -வைத்திய பரிசோதணையில் தெரியவந்த உண்மை- - Yarl Thinakkural

14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 21 இளைஞன்!! -வைத்திய பரிசோதணையில் தெரியவந்த உண்மை-

திருகோணமலை தம்பலாகாமம் பகுதியில் 14 வயதுடைய சிறுமியொருவரை துஸ்பிரயோகத்திற்குட்படுத்தி கர்ப்பமாக்கிய இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்டவர் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது அவரை அடுத்த மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமாறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் விசானி தேனவது உத்தரவிட்டார்.

யூனிட் முள்ளிப்பொத்தானை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தம்பலாகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் தனது சகோதரரின் மனைவியின் தங்கையை துஸ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளதாகவும், சிறுமி பெற்றோருடன் வயிற்று வலி காரணமாக வைத்தியசாலைக்கு சென்ற நிலையில் வைத்தியர்களினால் பரிசோதக்குட்படுத்திய போதே ஒரு மாதம் கர்ப்பிணியாகிவுள்ளமை தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபரை பொலிஸார் கைதுசெய்து கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே இவ்வாறு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Post a Comment

Previous Post Next Post