இலங்கை சிறுவர்களின் 130 ஆபாச வீடியோக்கள்!! -அமெரிக்கா உள்ளிட்ட 5 நாடுகளுக்கு விற்ற ஆங்கில ஆசிரியர்- - Yarl Thinakkural

இலங்கை சிறுவர்களின் 130 ஆபாச வீடியோக்கள்!! -அமெரிக்கா உள்ளிட்ட 5 நாடுகளுக்கு விற்ற ஆங்கில ஆசிரியர்-

இலங்கை சிறுவர்களை துஸ்பிரயோகம் செய்து ஆபாச வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்த பன்னிபிட்டிய ஆங்கில ஆசிரியர் அதை அமெரிக்கா உள்ளிட்ட 5 நாடுகளில் உள்ள சிலருக்கு பெரும் தொகை பணத்திற்கு விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது. 

பன்னிப்பிட்டியவில் உள்ள 54 வயதுடைய ஆங்கில ஆசிரியரான குறித்த நபர் திருமணம் செய்து பின்னர் விவாகரத்து செய்துக்கொண்டவர். இவர் 8 வயது தொடக்கம் 15 வயதான சிறுவர்களுக்கு பிரத்தியோக வகுப்புக்களை நடத்தி வருகின்றார்கள். 

குறித்த வகுப்பில் கல்வி கற்க வரும் ஆண் சிறுவர்களை அவர் துஸ்பிரயோகம் செய்துள்ளார் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த ஆசிரியரின் வீட்டிலிருந்து பெருந்தொகையான உள்ளாடைகளும் மீட்கப்பட்டுள்ளதோடு சிறுவர்களின் ஆபாச காணொளிகள் அடங்கிய 130 காணொளிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த நபர் க.பொ.த சாதாரண தரம் வரையிலேயே கல்வி பயின்றுள்ளார் என்பதோடு அவருக்கு ஆங்கிலம் கற்பிக்க போதியளவு தகுதியில்லை எனவும் விசாரணைகளில் அறியகிடைத்துள்ளது.

சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதை தொடர்ந்து எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

துஸ்பிரயோகத்திற்கு இலக்கான 3 சிறுவர்களிடம் விசாரணைகள் இடம்பெற்று வருவதோடு சந்தேக நபரால் சிறுவர்களுக்கு ட்ரோன் கெமரா பரிசளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

Post a Comment

Previous Post Next Post