பொலிஸ் நிலையத்திற்கு வந்த கொரோனா தொற்றாளர்!! -13 பொலிஸார் தனிமைப்படுத்தலில்- - Yarl Thinakkural

பொலிஸ் நிலையத்திற்கு வந்த கொரோனா தொற்றாளர்!! -13 பொலிஸார் தனிமைப்படுத்தலில்-

கொரோனா அச்சம் காரணமாக ஹிங்குராங்கொடை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 13 பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

குறித்த பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள வீடொன்றில் இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கந்தகாடு போதை பொறுள் மறுவாழ்வு மையத்தில் உள்ள அதிகாரி ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து குறித்த 13 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கொரோனா தொற்றாளர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த பொலிஸ் நிலையத்திற்கு வந்து சென்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post