சட்டவிரோதமான முறையில் மிக நீண்ட காலமாக நிட்டம்புவ பகுதியில் இரகசியமான முறையில் இயங்கி வந்த கருக்கலைப்பு மையம் ஒன்று பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
நிட்டம்புவ பொலிஸாரினால் நடத்தப்பட்ட இத்திடீர் சுற்றிவளைப்பின் போது அங்கிருந்த மருத்துவர் ஒருவர் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
5 பெண்கள் மற்றும் 4 ஆண்கள் உட்பட சேவையாளர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
கருகலைப்பிற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள், மருந்துகள் மற்றும் தேசிய அடையாள அட்டைகள் இதன்போது மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளது.
ஒரு கருக்கலைப்பிற்கு சுமார் 40 ஆயிரம் ரூபா பெற்றுக் கொள்ளப்படுவதாக பொலிஸார் நடத்திய ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
Post a Comment