இந்தியாவில் 11 இலட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு - Yarl Thinakkural

இந்தியாவில் 11 இலட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு

இந்தியாவில் ஒரு நாளில் 40,425பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டோர் தொகை 11இலட்சத்தை தாண்டியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவாக 40,425பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், நாட்டில் திங்கட்கிழமை வரையான 24 மணி நேரத்தில் மேலும் 40,425 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


இதன் மூலம் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு 11,18,043ஆக அதிகரித்துள்ளது. 24மணி நேரத்தில் கொரோனாவுக்கு மேலும் 681 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்த உயிரிழப்பு 27,497ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து இதுவரை 7,00,087பேர் மீண்டுள்ளனர். 3,90,459 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Post a Comment

Previous Post Next Post