வீரியம் காட்டுகிறதா கொரோனா!! -சற்று முன் 11 பேருக்கு தொற்று- - Yarl Thinakkural

வீரியம் காட்டுகிறதா கொரோனா!! -சற்று முன் 11 பேருக்கு தொற்று-

நாட்டில் தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் தொகை அதிகரித்துச் செல்லுகின்றது.

இதன்படி சற்று முன்னரும் மேலும் 11 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த அனைவரும் சேனபுர புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் சேவையாற்றி வந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின எண்ணிக்கை 2642 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது, 650 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என்றும் அமைச்சு மேலும் தகவல் தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post