கொரோனா சந்தேகம்!! -119 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்- - Yarl Thinakkural

கொரோனா சந்தேகம்!! -119 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்-

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் உள்ள கைதிகளின் குடும்ப உறுப்பினர்கள் 119 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த தரப்பினரை இராணுவத்தின் பங்களிப்புடன் தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த உறவினர்கள் அனைவரும் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய கைதிகளை சந்தித்துள்ளனர்.

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அதன் அருகில் அமைந்துள்ள கந்தகாடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையம் வைத்தியசாலையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

கொவிட் 19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தின் ஆலோசகராக பணிபுரிந்த பெண்ணின் குடும்ப உறுப்பினர்களும் தற்போது சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.


அதேபோல் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து விடுமுறைக்காக சென்றுள்ள 8 ஆலோசகர்களை மீள அழைத்துக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post