10 வருட ஏமாற்றத்தை போக்க: இம்முறை உரிமைக்காக வாக்களியுங்கள்!! -கோரும் பல்கலை மாணவர் ஒன்றியம்- - Yarl Thinakkural

10 வருட ஏமாற்றத்தை போக்க: இம்முறை உரிமைக்காக வாக்களியுங்கள்!! -கோரும் பல்கலை மாணவர் ஒன்றியம்-

கடந்த 10 வருடத்தில் தமிழ் இனத்திற்கு எந்த முன்னேற்றமும் இல்லாமல் உள்ளமை விரக்தியை ஏற்படுத்துகிற்து என்று யாழ்.பல்கலைகழக்கழ மாணவர் ஒன்றியம் கூட்டிக்காட்டியுள்ளது. 

நடைபெறவுள்ள பாராளுமன்ற பொது தேர்தலில் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் அர்ப்பணத்தோடு இருக்கும் கட்சிகளுக்கு வாக்களிக்குமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரியுள்ளது.

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்படி கோரிக்கையை முன்வைத்துள்ளது. 

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- 

தமிழ் மக்களின் ஆயுத ரீதியான விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்டு 10 வருங்கள் கடந்துவிட்ட நிலையில் நாம் மீண்டும் ஒரு பொதுத் தேர்தலை எதிர் கொள்ளுகின்றோம். 

போர் மௌனிப்பின் பின் எம்மக்களின் சுயாதிபத்தியத்துக்கான போராட்டத்தை அரசியல் தீதியாக முன் எடுக்க வேண்டும். 

இன அழிப்புக்கான பொறுப்புக் கூறலுக்கு இலங்கை அரசை சர்வதேச ரீதியாக உந்துவதன் மூலம் தமிழ் மக்களுக்கான பரிகார நீதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். 

அதிலிருந்து பிறக்கக்கூடிய ஒரு தீர்வே தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவு செய்யும் என்பதில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் என்போம் தெளிவாகவே இருந்து வருகின்றது. 

ஆயினும் எமது கடந்த 10 வருடகால அரசியல் பயணத்தை திரும்பிப் பார்க்கும் போது இவ்விடயங்களில் நாம் சிறிதும் முன்னேறவில்லை என்து விரக்தி தரும் ஒரு விடயமாகவே இருக்கிறது.

இன்றைய நிலையில் தென்னிலங்கையில் பேரினவாத சக்திகள் பெருமளவில் உருத்திரண்டுள்ள. இலங்கை ஒரு பௌத்த சிங்கள தேசம் என்தை உறுதிப்படுத்துவதில் அனை மு;னந்து நிற்பது வெள்ளிடை மலையாக உள்ளது. 

வடக்கிலே தமிழ் மக்கள் மத்தியில் காணப்படும் சமய சாதீய முரண்பாடுகளையும் போரின் பின்னான வறுமை நிலையையும் தமக்கு சாதகமாக பயன்படுத்தி அரசியல் களத்தில் காலூன்றிவிட வேண்டும் என்ற பெது விருப்போது தென்னிலங்கைக் கட்சிகளும் வட கிழக்கிலுள்ள அவர்களின் முனகவர்களும் களமிறங்கியுள்ளார்கள். 

இந்நிலையில் தமிழ் தேசிய நிலைப்பாட்டிலிருந்து செயல்படுவதாக சொல்லும் கட்சிகள், கட்சிகளுக்குள்ளான உட்பூசல்களாலும் கட்சிகளுக்கிடையிலான முரண்பாடுகளாலும் பிளவுண்டு சிதறுண்டவைகளாக இத் தேர்தலை எதிர்கொள்கின்றன. 

ஜனாதிபதி தேர்தலை ஒட்டி இக்கட்சிகளுக்கிடையில் கொள்கையிலும், செயற்பாட்டிலும் ஒரு உடன்பாட்டை எட்ட நாம் மேற்கொண்ட முயட்றிகளை இக்கட்சிகள் பயனற்றவையாக்கி விட்டன. 

எனவே இன்றைய சூழ்நிலை பெரும் விரக்தி தருவதாக அமைந்திருப்பதால் தமிழ் மக்களாகிய நாம் தேர்தலில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கிவிடவோ அல்லது சலுகைகளை பிரச்சாரம் செய்யும் கட்சிகள் பக்கம் சாய்ந்து விடவோ உந்தபடலாம். 
அது தவறு என்பதை நான் தெளிவாக வலியுறுத்த விரும்புகின்றோம். 

ஆகவே யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினராகிய நாம் எமது வாழுவா தமிழ்த் தேசிய மரபின் நிலை நின்று பின்வரும் வேண்டுகோள்களை எமது தமிழ் மக்களிடம் முன்வைக்கின்றோம். 

விரக்தி மனநிலையிலிருந்து விலகி வாக்களிக்க முன்வாருங்கள்
தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் அர்ப்பணத்தோடு இருக்கும் கட்சிகளை தெரிவு செய்யுங்கள் கட்சி எல்லைகளுக்கப்பால் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக அஞ்சாமல் குரலெழுப்பக் கூடிய ஆளுமைகளை அடையாளங்கண்டு வாக்களியுங்கள். 

இதன் மூலம் தேர்தலுக்கு முன் எம்மால் எட்டப்பட முடியாதமல் போன ஒன்றுமையை தேர்தலின் பின்னாவது செயற்படு தளத்தில் எட்ட முடியுமென்று நாம் நம்புகின்றோம். 

30 வருட கால போராட்டத்தில் நாம் இழந்தவை பெரிது. அவற்றின் கைமாறு இன்றில்லாவிட்டாலும் என்றாவது கிட்டவேண்டும் என்பதில் உறுதியாக இருப்போம் என்றுள்ளது. 


Post a Comment

Previous Post Next Post