பிரத்தியோக வகுப்பில் சிறுவர்கள் துஸ்பிரயோகம்!! -10 வருடமாக செய்த ஆசிரியர் கைது!! துஸ்பிரயோக வீடியோவும் மீட்பு- - Yarl Thinakkural

பிரத்தியோக வகுப்பில் சிறுவர்கள் துஸ்பிரயோகம்!! -10 வருடமாக செய்த ஆசிரியர் கைது!! துஸ்பிரயோக வீடியோவும் மீட்பு-

வீட்டில் பிரத்தியோக வகுப்புக்களை நடத்தும் ஆசிரியர் ஒருவர் கடந்த 10 வருடங்களாக பல சிறுவர்களை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தற்போது சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

குறித்த ஆசிரியர் 3 சிறுவர்களை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை தொடர்பில் சிறுவவர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து கொள்ளுபிட்டி பொலிஸாரினால் அவர் இன்று கைது செய்யப்பட்டார். 

துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட 2 மாணவர்கள் தற்போது மருத்துவ பரிசோதனைகளுக்காக களுபோவில போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

மற்றுமொரு மாணவரையும் இன்றைய தினம் பரிசோதனைக்கு அனுப்பப்படவுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் தெரிவித்தார்.

நீண்ட நாட்களாக சிறுவர்களை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி அந்த ஆசிரியர் அதனை காணொளி எடுத்து வந்துள்ளார் என்றும் சுமார் 10 வருடங்களாக அவர் இவ்வாறான துஸ்பிரயோக செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post