யாழ் மாவட்டத்தில் இதுவரை தேர்தல் விதிமுறை மீறல்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 105 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்டச் செயலகத்தில் இன்று நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-
யாழ் தேர்தல் மாவட்டத்தில் ,துவரை 105 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
மேலும் 25 ஆம் திகதிக்கு பிறகு யாழ் மாவட்ட செயலகத்தில் இயங்குகின்ற மத்திய முறைப்பாட்டு நிலையத்துக்கு மேலதிகமாக பன்முகப்படுத்தப்பட்ட வகையில் மேலும் மூன்று முறைப்பாட்டு நிலையங்களை சண்டிலிப்பாய், சாவகச்சேரி மற்றும் பருத்தித்துறை பிரதேச செயலகங்களிலே அமைக்கப்படவுள்ளன.
இந்த நிலையங்களிலே வெளிமாவட்டத்தில் இருந்து விசேடமாக வரவழைக்கப்படுவவர்களுடன், யாழ் மாவட்ட அலுவலர்களும் இணைந்து கண்காணிப்பு மற்றும் முறைப்பாடுகளை பெறுவதற்கு தயாராக இருப்பார்கள் என்றார்.
Post a Comment