போதை பொருள் விற்பனை!! -கணவன், மனைவி கைது- - Yarl Thinakkural

போதை பொருள் விற்பனை!! -கணவன், மனைவி கைது-

கட்டுநாயக்க விமானப்படை முகாமில் கடமையாற்றும் சார்ஜன்ட் ஒருவரை ஹெரோயின் மற்றும் கஞ்சாவுடன் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட அவரிடம் இருந்து 100 கிராம் ஹெரோயின் மற்றும் 400 கிராம் கேரளா கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்ட இந்த நபர் வழங்கிய தகவலுக்கு அமைய போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டுட நிலையில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கு அமைய நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர் ஒருவரும், அவரின் மனைவியை 
பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களின் வீட்டில் இருந்து சுமார் 2 கிலோ கிராம் கஞ்சாவையும் தாம் கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பணியகத்தின் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post