யாழினை சேர்ந்த புலனாய்வு உத்தியோகத்தர் சுட்டுத் தற்கொலை!! -கல்முனையில் சம்பவம்- - Yarl Thinakkural

யாழினை சேர்ந்த புலனாய்வு உத்தியோகத்தர் சுட்டுத் தற்கொலை!! -கல்முனையில் சம்பவம்-

தேசிய புலனாய்வுச் சேவையின் புலனாய்வு உத்தியோகஸ்தராக கடமையாற்றிய யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த ஒருவர் கைத்துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்முனை பொலிஸ்  நிலையத்தில் உள்ள தேசிய புலனாய்வுச் சேவை காரியாலயத்திலேயே மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதன்போது, யாழ்ப்பாணம், நெல்லியடியைச் சேர்ந்த கமல்ராஜ் (வயது 21) என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் காதல் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார் என பொலிஸாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post