பெண்கள், சிறுவர்களின் பாதுகாப்பே எனது முதன் நோக்கு -உமாச்சந்திர பிரகாஸ்- - Yarl Thinakkural

பெண்கள், சிறுவர்களின் பாதுகாப்பே எனது முதன் நோக்கு -உமாச்சந்திர பிரகாஸ்-

வடக்கு கிழக்கில் பெண்கள், சிறுவர்கள் சுமந்திரமாக வாழ்வதற்கான சூழலை உருவாக்குவதே எனது முழு நோக்கமாகும் என்று ஜக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட வேட்பாளர் உமாச்சந்திர பிரகாஸ் தெரிவித்தார். 

தமிழ் மக்களின் வாக்குகளை இதுவரை பெற்றவர்களுக்கு யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் என்ற சரியான எண்ணிக்கை கூட தெரியாமல் இருப்பது வேதனையான விடயம் என்றும் அவர் கவலை வெளியிட்டுள்ளார். 

யாழ்.ஊடக அமையத்தில் இன்று நண்பகல் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இவ்விடயம் தொடரப்pல் அவர் மேலும் தெரிவிக்கையில்:- 

யுத்தம் முடிவடைந்து 10 வருடங்கள் கடந்துவிட்டது. ஆனால் இன்றும் யுத்தத்தினால் விதவைகளாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரம் என்று செல்லப்படுகின்றது. இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்ட தகவலாக இருப்பதற்கு சந்தர்ப்பங்கள் இல்லை. 

யுத்தம் முடிந்த பின்னர் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படியே 80 ஆயிரம் விதவைகள் இங்கு உள்ளார்கள் என்று சொல்லப்படுகின்றது. ஆனால் யுத்தம் முடிந்து 10 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் இன்றும் பழைய தகவல்களை வைத்துக் கொண்டு, நாங்கள் விதவைகளுக்காக இது செய்வோம் இது செய்வோம் என்று பேசுவதில் எந்த பயனும் கிட்டப் போவதில்லை. 

யுத்தத்திற்கு பின்னர் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள மிக முக்கியமான பிரச்சினைகளாக புற்று நோய், சிறுநீரக நோய் மற்றும் இருதய நோய் போன்றவை இருந்தது. இதற்கு மேலதிகமாக முள்ளந்தண்டு தொடர்பான பிரச்சினைகளால் அவதிப்பட்டுள்ளார்கள். நாங்கள் அற்று சென்ற ஒரு கிராமத்திலே 22 வயது இளைஞன் முள்ளந்தண்டால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருக்கின்றான். யுத்தம் நிறைவடையும் போது அவருக்கு 12 வயது. 

கடந்த 10 வருடங்களாக தமிழ் மக்களின் ஆணையை பெற்றவர்கள் இந்த விதவைகளின் வாழ்வினை மேம்படுத்துவதற்கான எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. இது ஒரு புறம் இருக்க தமக்கு வாக்களித்தவர்களில் எத்தனை விதவைகள் உள்ளார்கள் என்று கூடி தெரியாதவர்களாகவே இந்து வந்துள்ளார்கள். 

இன்றும்25 வருடங்களுக்கு இங்கு 80 ஆயிரம் விதவைகள் உள்ளார்கள் என்று பேசிக் கொண்டிருக்க மட்டுமெ அவர்களால் முடியும்.

யுத்தம் நிறைவடைந்ததுக்கு பிறகு அந்த மக்கள் வாழ்கையிலே விரத்தியுற்றவர்களாக, வாழவேன்டும் என்ற ஒரு பிடிப்பு இல்லாதவர்களாக இருக்கின்றார்கள். அவர்களுக்கு உளவியல் சார்ந்த ஒரு ஆலேசனைகளை அல்லது வழிகாட்டல்களை வாழங்க வேண்டும். வாழ வேண்டும் என்ற பிடிப்பை மக்களுக்கு வர வேண்டும். 

சோந்த காணி இல்லாததால் பலர் வீட்டுத்திட்டங்களை கூடி பெறமுடியாத நிiலியல் உள்ளார்கள். வடக்கு கிழக்கில் பெண்கள் சிறுவர்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கான சூழல் இங்கு உருவாக்கப்பட வேண்டும். 

இவை அனைத்தினையும் சஜித் பிரேமதாசாவை தலைமையாக கொண்ட எமது அணி செய்து முடிக்கும் என்றார். 

Post a Comment

Previous Post Next Post