யாழில் வாக்கு எண்ணும் ஒத்திகை - Yarl Thinakkural

யாழில் வாக்கு எண்ணும் ஒத்திகை

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று காலை பொதுத் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணும் ஒத்திகை இடம்பெற்று வருகிறது.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹ_ல், கிளிநொச்சி மாவட்டச் செயலாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் இந்த வாக்கு எண்ணும் ஒத்திகை நடைபெறுகின்றது.

கோவிட் -19 நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் சுகாதார அமைச்சின் கட்டுப்பாடுகளைப் பின்பற்றி பொதுத் தேர்தல் வாக்குகளை எண்ணும் பணியை முன்னெடுப்பது பற்றி இந்த ஒத்திகை முன்னெடுக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 9.30 மணியளவில் ஒத்திகை ஆரம்பமானது.

இதேவேளை, வாக்கெடுப்பு ஒத்திகை கடந்த வாரம் நாவந்துறை பாடசாலையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post