உயர்தர பரீட்சை எப்போது!! -டலஸ் தகவல்- - Yarl Thinakkural

உயர்தர பரீட்சை எப்போது!! -டலஸ் தகவல்-

நாட்டில் உயர்தர வகுப்புக்களை கொண்ட அனைத்து பாடசாலைகளும் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் உயர்தர பரீட்சை நடைபெறும் திகதி தீர்மானிக்கப்படும் என கல்வி அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

உயர் பரீட்சையை சில வாரங்களுக்கு தாமதப்படுத்துமாறு மாணவர்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்தினால் உயர்தர பரீட்சை இடம்பெறும் திகதி தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் கல்வி அமைச்சு அதிகாரிகள் மற்றும் பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரிகள் தன்னிடம் ஆலோசனை வழங்கியதாக கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post