பூநகரியில் டிப்பர் - மோட்டார் சைக்கில் மோதி கோர விபத்து!! -ஒருவர் சாவு- - Yarl Thinakkural

பூநகரியில் டிப்பர் - மோட்டார் சைக்கில் மோதி கோர விபத்து!! -ஒருவர் சாவு-

பூநகரி- மன்னார் வீதியில் 4ம் கட்டை பகுதியில் நடந்த கோர விபத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சைக்காக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2 மணியளவில் டிப்பரும் மோட்டார் சைக்கிலும் மோதியே மேற்படி விபத்து நடந்துள்ளதாக பூநகரி பொலிஸார் தெரிவித்தனர். 

மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி மணல் ஏற்றிவந்த டிப்பர் வாகனம் வீதியின் குறுக்கே நுழைந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. சம்பவத்தில் 

ஜெயபுரம் பகுதியை சேர்ந்த செ.தவராஞ்சன் என்ற 2 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். இதே சம்பவத்தில் ஜெயபுரம் பகுதியை சேர்ந்த செ.வசந்தகுமார் (வயது 41) என்ற 4 பிள்ளைகளின் தந்தை காயமடைந்துள்ளார். 

சம்பவம் தொடர்பாக பூநகரி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 
Previous Post Next Post