ஓடும் பயணிகள் பேருந்தில் இளம் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த ஒரு நபரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை தேடி வருகின்றனர்.
உத்திரப்பிரதேசத்தின் பிரதாப்கர் பகுதியில் இருந்து நொய்டாவுக்கு 25 வயது பெண் தனது இரு குழந்தைகளுடன் கணவரை பார்க்க புறப்பட்டு உள்ளார்.
நொய்டாவுக்கு ஏசி ஸ்லீப்பர் பேருந்தில் அவருக்கு கடைசி இருக்கை ஒதுக்கப்பட்டது. ஏசி பேருந்தில் கிட்டத்தட்ட 12க்கும் மேற்பட்டவர்கள் அவருடன் பயணம் செய்துள்ளனர்.
இரவு 2 மணி அளவில் லக்னோவிற்கும் மதுராவிற்கும் இடையே பேருந்தில் உள்ள இரு ஓட்டுநரில் ஒருவர் அப்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். ஏதேனும் சத்தமிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் மிரட்டியுள்ளார். மேலும் 2 பேர் இந்த செயலில் ஈடுபட்டு உள்ளனர்.
இது குறித்து கவுதம் புத்தா நகர் பொலிஸ் நிலையத்pல் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளனர். முறைப்பாட்டை கொண்டு விசாரணை நடத்திய பொலிஸார் ஒருவரை கைது செய்துள்ளனர்.
மேலும் இச் சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற நபர்களை தேடி பொலிஸார் வலை விரித்துள்ளனர்.
Post a Comment