ஊரடங்கு நேரத்தில் மாற்றம்!! -ஜனாதிபதி செயலகம் அறிவித்தது- - Yarl Thinakkural

ஊரடங்கு நேரத்தில் மாற்றம்!! -ஜனாதிபதி செயலகம் அறிவித்தது-

நாட்டில் நாளை ஞாயிற்றுக்கிழமை 14 ஆம் திகதி தொடக்கம் நள்ளிரவு 12 மணி தொடக்கம் அதிகாலை 4 மணிவரை மட்டுமே ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்திருக்கின்றது. 

முன்னதாக இரவு 11 மணிக்கு அதிகாலை 4மணிவரை  ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த நடைமுறை நள்ளிரவு 12 மணி தொடக்கம் அதிகாலை 4 மணிவரை என மாற்றப்பட்டுள்ளது. 

மேலும் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த நடைமுறை மறு அறிவித்தல் வரை தொடரும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post