தேனீரில் சீனி குறைந்தால் கூட சர்வதேச விசாரணை கோருவோரே முன்னணியினர் -ரெமீடியஸ் கூறுகிறார்- - Yarl Thinakkural

தேனீரில் சீனி குறைந்தால் கூட சர்வதேச விசாரணை கோருவோரே முன்னணியினர் -ரெமீடியஸ் கூறுகிறார்-

மனைவி கொடுக்கும் தேனீரில் இனிப்பு குறைவாக இருக்கிறது என்பதற்காகவும் கூட சர்வதேச விசாரணையை கோரும் பயனற்ற தரப்பினர்களே தமிழ் தேசிய முன்னணியினர் என்று சட்டத்தரணியும், ஈழமக்கள் ஜனநாயகட்சியின் பாராளுமன்ற வேட்பாளருமான மு.ரெமிடியஸ் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

இலங்கையில் இடம் பெற்ற உள்நாட்டுப் போரின் காரணமாக சொத்துக்களும் ஏராளமான உயிர்களும் இழக்கப்பட்டுள்ளன. இறுதி யுத்தம் இடம்பெடம்ற்ற காலப் பகதிகிளல் யாழ்ப்பாணத்திலே ஏராளமான இளைஞர்கள் இராணுவத்தினரால் விசாரணைக்கு கூட்டிச் செல்லப்பட்ட போது மனித உரிமை சட்டத்தரணியாக இருந்த நாமே ஐந்நூறுகும் மேற்பட்ட இளைஞர்களை காப்பாற்றியிருந்தேன்.

ஆனால் இறுதிப்போர் நடைபெற்ற காலப்பகுதியில் இங்கிலாந்தில் செகுசாக இருந்த கஜேந்திரகுமார் தரப்பினர் தற்போது போலித்தேசியம் பேசி வருகின்றனர். அதனைக்கூட ஏற்றுக்கொண்டாலும் தமிழீழத்தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு அடுத்து தேசியத்தலைவர் கஜேந்திரகுமாரே என்று அவருடன் இருப்பவர்கள் மேடைகளில் கூறிவருகின்றனர்.

போராட்டத்தின் வலியினை அறியாதவரும்இ போராட்டத்தில் பங்குபற்றாத ஒருவரை அரசியல் பிழைப்புக்கா இவ்வாறு கூறலாமா? தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் சர்வதேசம் சர்வதேசம் என்று கொக்கரித்து வருகின்றனர்.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியில் இருப்பவர்கள் தங்களது மனைவிமார் தயாரிக்கும் தேநீருக்கு இனிப்பு குறைவாக இருந்தாலும் அதற்கும் சர்வதேசத்திடம் முறையிடுவோம் என்றே கூறிக்கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு இதை விட்டால் வேறு அரசியல் இல்லை.

இதேபோல தமித்தேசியக் கூட்டமைப்பினரும் போலித்தேசியம் பேசி மக்களை உசுப்பேத்தி அரசியல் செய்து வருகின்றனர். கடந்த காலத்தில் ரணில் அரசுக்கு முண்டுகொடுத்து கோடிக்கணக்கில் சம்பாதித்து மாளிகைகளையும் சொத்துக்களையும் வாங்கி வைத்துள்ளனர்.

இவர்களை மக்கள் இனியும் ஏற்பார்களா? நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் இவர்களுக்கு மக்கள் தகுந்தபாடம் புகட்டவேண்டும். ஈழமக்கள் ஜனநாயக்கட்சியின் செயலாளர் அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா அரசுடன் மக்களுக்குத் தேவையான விடையங்களைபேசி துரித அபிவிருத்திகளை முன்னெடுத்துவருகின்றார்.

அவரது கரங்களை பலப்படுத்த இம்முறை எமக்கு அதிக ஆசனங்களை வழங்கி மக்கள் பலமிக்க அணியாக எம்மை பாராளுமன்றம் அனுப்பி வைக்கவேண்டும் என்றார்.

Post a Comment

Previous Post Next Post