யாழில் இருந்து தமிழகம் திரும்பியவருக்கு கொரோனா இல்லை!! -பரபரப்புக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது மருத்துவ அறிக்கை- - Yarl Thinakkural

யாழில் இருந்து தமிழகம் திரும்பியவருக்கு கொரோனா இல்லை!! -பரபரப்புக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது மருத்துவ அறிக்கை-

யாழ்ப்பாணம் - இணுவில் பகுதியில் நீண்ட காலம் தங்கியிருந்து அண்மையில் தமிழகம் திரும்பிய புடவை வியாபாரி ஒருவருக்கு கொரோனா தொற்று ,ருப்பதாக வெளியான செய்திகள் பெரும் பரபரப்;பை ஏற்படுத்தியிருந்த நிலையில் குறித்த வியாபாரிக்கு கொரோனா இல்லை என்பது மருத்துவ பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.

கணேஸ் பாபு என்ற அந்த வியாபாரி தற்போது தமிழகத்தில் - திண்டுக்கல் மாவட்டத்தில் தனது குடும்பத்தினருடன் இணைந்துள்ளமையை யாழ்.தினக்குரல் உறுதி செய்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளானதாகக் கூறப்பட்ட கணேஸ் பாபு என்ற வியாபாரி மற்றும் அவரது நண்பர்களுடன் நேற்றிரவு எமது செய்தியாளர் தொடர்புகொண்டு பேசிய நிலையில் அவருக்கு தொற்று நோய் இல்லை உறுதி செய்யப்பட்டது.

தொற்று நோய் இருப்பதாகக் கூறப்பட்ட யாழில் இருந்து திரும்பிய கணேஸ் பாபு என்ற வியாபாரிக்கு கடந்த 9 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட கொரோனா தொற்று பரிசோதனையின் முடிவு அவருக்கு தொற்று இல்லை என்பதை உறுதி செய்துள்ளது.

ஏனினும் அவருக்கு 3 ஆம் திகதி நடத்தப்பட்ட பரிசோதனையின் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக வெளியான முடிவுகளே சர்க்சைகளுக்குக் காரணமாக அமைந்தன.

ஆனால் 3 ஆம் திகதி தொற்று நோயால் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாக முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் 9 ஆம் திகதி இடம்பெற்ற இரண்டாம் கட்டப் பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை என உறுதிப்படுத்தி தமிழக சுகாதாரத் துறை சான்றிதழ் வழங்கியுள்ளது.

எனினும் 6 நாட்களுக்கு தொற்று எனவும் தொற்று இல்லை எனவும் முடிவுகள் மாறியமை எவ்வாறு என்பது குறித்து தற்போது கேள்விகள் எழுந்துள்ளன.

இது தொடர்பாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரனை நேற்றிரவு தொடர்பு கொண்டு கேட்டபோது இந்தியத் துணைத் தூதரகத்தின் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே தாங்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டதாகக் கூறினார்.

இணுவிலில் தங்கியிருந்த வியாபாரிக்கு கொரோனா இல்லை எனத் தகவல் வெளியாகியுள்ள நிலையில் அங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்கள் குறித்த நடவடிக்கை என்ன? ஏன கேதீஸ்வரனிடம் கேட்டபோது, இந்திய வியாபாரிக்கு கொரோனா இல்லை என்ற தகவலை உத்தியோகபூர்வமாக எம்மால் உறுதி செய்ய முடியவில்லை.

உத்தியோகபூர்க தகவல் வரும் வரை அவர்களின் தனிமைப்படுத்தல் நடவடிக்கை தொடரும் எனக் குறிப்பிட்டார்.

இதனையடுத்து யாழ்ப்பாணத்துக்காக இந்தியத் துணைத் தூதுவரைத் நேற்றிரசு தொடர்புகொண்டு இந்திய வியாபாரிக்கு கொரேனா ,ல்லை என்ற தகவலை உறுதிப்படுத்த முடியுமா? என யாழ்.தினக்குரல் கோரியது.

இதற்குப் பதிலளித்த அவர், யாழில் இருந்து திரும்பிய நபருக்கு கொரோனா தொற்று இல்லை என்ற மருத்துவ பரிசோதனை அறிக்கை தமக்கும் சம்பந்தப்பட்டவரின் நண்பர்களால் அனுப்பிவைக்கப்பட்டதாகக் கூறினார்.

எனினும் இந்திய மத்திய சுகாதாரத் துறையுடன் தொடர்புகொண்டு தகவல்களை உத்தியோகபூர்வமாக உடனடியாக உறுதிப்படுத்த முடியவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இந்தத் தகவலை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் துணைத் தூதுவர் தெரிவித்தார்.

ஏனினும் யாழ்ப்பாணத்தில் இருந்து திரும்பிய நபருக்கு கொரோனா இல்லை என்ற செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது.

இதனால் யாழ்ப்பாண மக்களும் அச்சமின்றி இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது மகிழ்ச்சியே எனவும் அவர் கூறினார்.

Post a Comment

Previous Post Next Post