வயோதிப பெண்களையும் வீட்டுவைக்காத கொள்ளை கும்பல்!! -சித்தங்கேணியில் சம்பவம்- - Yarl Thinakkural

வயோதிப பெண்களையும் வீட்டுவைக்காத கொள்ளை கும்பல்!! -சித்தங்கேணியில் சம்பவம்-

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை சித்தங்கேணியில் வயோதிபப் பெண்கள் வசித்துவந்த வீட்டிற்குள் புகுந்த கொள்ளைக் கும்பல் அங்கிருந்தவர்களை தாக்கிவிட்டு 25 பவுண் தங்க நகைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்டுத் தப்பித்துள்ளது.

யாழ்ப்பாணம் - காரைநகர் பிரதான வீதி சித்தங்கேணிப் பகுதியில் உள்ள வீட்டில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் நடந்துள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர். 

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது:- 

அதிகாலை ஒரு மணியளவில் கொள்ளையர்கள் இருவர் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். அவர்கள் இருவரும் அங்கிருந்து வயோதிப பெண்கள் இருவரையும் மிரட்டியதுடன் ஒருவரை வீட்டு வளாகத்துக்குள் உள்ள கோவிலில் போய் அமருமாறு கூறியுள்ளனர். ஒருவர் அவ்வாறு ஆலயத்துக்குச் சென்றார்.

அதன்பின்னர் மற்றைய வயோதிபப் பெண் கூக்குரலிட்டதால் அவரது வாயை துணியால் கட்டிவிட்டு வீட்டை சல்லடை போட்டு தேடுதலை மேற்கொண்டுள்ளது.

அலுமாரியிலிருந்த பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டுவிட்டு வேறு நகைகள் இருந்தால் தரும்படி வாயைக் கட்டிய வயோதிபப் பெண்ணைத் தாக்கி கொள்ளையர்கள்கள் கேட்டுள்ளனர்.

கொள்ளையர்களுக்குப் பயந்து போத்தல்களில் போட்டு வைத்த நகைகளையும் அந்தப் பெண் எடுத்துக் கொடுத்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தடயவியல் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவருவதாக  வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment

Previous Post Next Post