கத்தியால் குத்தி ஆணொருவர் கொலை!! -கொலையாளி இராணுவத்திடம் சரண்- - Yarl Thinakkural

கத்தியால் குத்தி ஆணொருவர் கொலை!! -கொலையாளி இராணுவத்திடம் சரண்-

திருகோணமலை மாவடிச்சேனை பகுதியிலுள்ள கடற்கரையில் கத்திக்குத்துக்கு இலக்கான ஆணொருவரின் சடலமொன்று இன்று பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

புத்தளம் - காரியப்பர் வீதி முஹம்மது ஹனிபா ஹாரிஸ் (60 வயது) என்பவரே இதன் போது சடலமாக மீட்கப்பட்டவர் என்று பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர். 

கல்லடி - மீன்வாடி கடற்கரை பகுதியில் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய் தர்க்கம் கைகலப்பாக மாறியதினாலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இந்த சம்பவத்தையடுத்து தான் ஒருவரை கொலை செய்துள்ளதாக உடப்பு - தானஞ்சோலை 05 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 49 வயது நபரொருவர் வாழைத்தோட்டம் பகுதியிலுள்ள இராணுவ முகாமுக்குள் சரணடைந்துள்ளார். 

இவ்வாறு சரணடைந்த சந்தேகநபரை இராணுவத்தினர் சேருநுவர பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

Post a Comment

Previous Post Next Post