தேர்தலில் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் யாருக்கு ஆதரவு? - Yarl Thinakkural

தேர்தலில் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் யாருக்கு ஆதரவு?

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தமிழர் தரப்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவரையும் எதிர்த்தோ அல்லது ஆதரித்தோ யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கை எதனையும் வெளியிடவில்லை என்று அதன் செயலாளர் தெரிவித்துள்ளார்.

நேற்றுக்காலை முதல் பல்கலைக்கழக வளாகத்தினுள் காணப்பட்டவை எனக்கூறப்படும் சில அநாமதேய துண்டுப்பிரசுரங்கள் தொடர்பில், மாணவர் ஒன்றியத்துடன் தொடர்புபடுத்தி சமூக வலைத் தளங்களில் பரவிய செய்தி தொடர்பில் கருத்துத் தெரிவித்த போதே யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் எம். பாலேந்திரா இவ்வாறு தெரிவித்துள்ளார்.


பொது மக்களுக்குத் தெளிவான நிலைப்பாட்டை அறிவிக்கும் வகையில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கைவெளியிடுமாயின், அது ஒன்றியத்தின் கடிதத் தலைப்பில், தலைவர், செயலாளரின் கையயாப்பங்களுடனேயே வெளியிடப்படும் என்றும், வதந்திகள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post