நெடுந்தீவில் வீடு புகுந்து தாக்குதல்!! -உடமைகள் நாசம்- - Yarl Thinakkural

நெடுந்தீவில் வீடு புகுந்து தாக்குதல்!! -உடமைகள் நாசம்-

நெடுந்தீவு 6 ஆம் வட்டாரத்தில் வீடொன்றுக்குள் புகுந்த விசமிகள் அங்கிருந்த உடமைகளை அடித்து நொருக்கிய சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த வீட்டிலிருந்த பெறுமதியான பொருட்கள், கல்வேலிகள், நீர் பம்பி, மின்சார இணைப்புக்கள் என பல இலட்சம் ரூபா பெறுமதியான உடமைகள் நாசமாக்கப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் இரவுவேளையே குறித்த சம்பவம் இடம்பெற்ற நிலையில் நேற்று காலையில் வீட்டு உரிமையாளர் அறிந்துள்ளார்.

வீட்டு உரிமையாளரால் நெடுந்தீவு பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் குறித்த பகுதியில் வசிக்கும் நான்கு சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டதில் குற்றத்தை ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.

மேலும் விசாரணைகளில் அவர்கள் புரிந்த பல குற்றங்களும் வெளிவந்துள்ளதாகவும் அவர்கள் மீது வழக்குத்தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் தெரியவருகின்றது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post