யாழில் இன்று ஒரு கொரோனா நோயாளி அடையாளம் !! - Yarl Thinakkural

யாழில் இன்று ஒரு கொரோனா நோயாளி அடையாளம் !!

யாழ்.போதனா வைத்திய சாலையில் இன்று நடந்த பி.சி.ஆர் பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது என்று வைத்திய சாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். 

இன்று 45 பேருக்கான பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.

போதனா வைத்தியசாலை விடுதிகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் ஒருவர், வவுனியா பொது வைத்தியசாலையில் 2 பேர், முல்லைத்தீவு பொது வைத்தியசாலையில் ஒருவர், முல்லைத்தீவு பாதுகாப்பு படையினர் ஆதாரவைத்தியசாலையில் ஒருவர், தெல்லிப்பளை ஆதாரவைத்தியசாலையில் ஒருவர், காங்கேசன்துறை கடற்படை வைத்தியசாலையில் 30 பேர், முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் மையத்தில் 9 பேர் உட்பட 45 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. 

இதில் முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையில் உள்ள ஒருவருக்க கொரோனா வைரஸ் தொற்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஏனைய 44 பேருக்கும் தொற்றில்லை என்றும் உறுதி செய்யப்பட்டது என்று பணிப்பாளர் மேலும் தெரிவித்தார். 

Post a Comment

Previous Post Next Post