தீயணைப்பு வீரருக்கு யாழ் மாநகர சபையில் அஞ்சலி!! - Yarl Thinakkural

தீயணைப்பு வீரருக்கு யாழ் மாநகர சபையில் அஞ்சலி!!

யாழ் மாநகரசபை தீயணைப்பு வீரர் அமரர் அ.சகாயராசாவின் இறுதி அஞ்சலிக்கூட்ட நிகழ்வு இன்று வியாழக்கிழமை யாழ் மாநகர தீயணைப்புப்படைப்பிரிவில் நடந்தது. 

யாழ் மாநகர சபையின் ஆணையாளர் ஜெயசீலன் தலைமையில் நடந்த இந்நிகழ்வில் அஞ்சலியின் பிரதம உரையினை யாழ் மாநகர சபையின் பதில் முதல்வர் து.ஈசன் நிகழ்த்தினார் தொடர்ந்து சிறப்புரைகளும் இடம்பெற்றன.

இவ் அஞ்சலி கூட்டத்தில் யாழ் மாநகர சபையின் உறுப்பினர்கள், விடுமுறையில் உள்ள தல்வர்  இமானுவேல் ஆனோல்ட், மாநகர சபையின் நிர்வாக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், தீயணைப்படை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டு அஞ்சலியினை செலுத்தினர்.


Post a Comment

Previous Post Next Post