யாழில் மாடுகளை மோதி தள்ளிய ரயில்!! - Yarl Thinakkural

யாழில் மாடுகளை மோதி தள்ளிய ரயில்!!

யாழ்ப்பாணத்தில் இருந்து காங்கேசன்துறை நோக்கி சென்ற ரயில் இரு பசு மாடுகளை மோதி தள்ளியுள்ளது.

நாவலர் வீதி பகுதியில் நடந்த இச்சம்பவத்தில் ஒரு பசு மாடு அங்கேயே உயிரிளந்துள்ளது.

மற்றைய மாடு எழுந்து நடக்க முடியாத நிலையில் அங்கேயே கிடந்துள்ளது.

காயமடைந்து நடக்க முடியாத நிலையில் கிடந்த மாடினை அப்பகுதி மக்களுடம் இணைந்து மீட்கும் முயற்சி இன்று காலை முதல் முன்னேடுக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த யாழ் மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபன், கால்நடை வைதியர்களான மாறன் மற்றும் பிரியந்தினி ஆகியோர் அப்பகுதி மக்களுடன் இணைந்து மீட்டு அருகில் உள்ள மர நிழலுக்கு அடியில் கொண்டு சென்று சேர்த்தனர்.

காயமடைந்த மாட்டிற்க்கு சிகிச்சை வழங்கும் நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Post a Comment

Previous Post Next Post