டக்ளஸ் தேவானந்தாவை கிண்டல் அடித்த சுமந்திரன்!! - Yarl Thinakkural

டக்ளஸ் தேவானந்தாவை கிண்டல் அடித்த சுமந்திரன்!!

கிழக்கு மாகாணத்திற்காக அமைக்கப்பட்டுள்ள செயலணி தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியமை தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கிண்டல் செய்துள்ளார்.

அவர் அனுப்பிய கடிதத்தால் எந்த பயணும் கிடைக்கப் போவதில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவருடைய வீட்டில் நேற்று காலை நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் கின்டல் செய்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

நேற்று (நேற்று முன்தினம்) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதிக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கின்றொராம். தமிழ், முஸ்லிம் ஒருவரும் இதில் நியமிக்கவில்லை. தயவு செய்து நியமியுங்கள் என்று கோரி அந்த கடிதத்தை எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் ஊடாக டக்ளஸ் தேவானந்தா என்ன சொல்ல வருகின்றார் என்றால், எங்களைப் போன்ற உங்களுக்கு விசுவாசமானவர்கள் இருக்கின்றோம்தானே, ஏன் எங்களிலே கூட உங்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது.

நீங்கள் சொல்வதைத்தான் நாங்கள் செய்வோம். அப்படியிருக்கத்தக்க வகையில் எங்களில் ஒருவரையாவது நியமித்திருக்கலாமே என்ற தொணியில் அந்த கடிதம் எழுதப்பட்டிருக்கின்றது. அதில் எந்த பிரியோசனமும் கிடையாது என்றார்.

Post a Comment

Previous Post Next Post