பச்சோந்தி மிஞ்சிய சிறிதரனின் சந்தர்ப்பவாத அரசியலால்!! - Yarl Thinakkural

பச்சோந்தி மிஞ்சிய சிறிதரனின் சந்தர்ப்பவாத அரசியலால்!!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் சந்தர்ப்பவாத அரசியலை பார்த்து பச்சோந்திகள் குடும்பத்தோடு தற்கொலை செய்துவிட்டதாக தமிழரசு கட்சியின் மகளிர் அணிச் செயலாளர் திருமதி விமலேஸ்வரி ஸ்ரீகாந்தறூபன் தெரிவித்தார்.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று முற்பகல் 10 மணிக்கு இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஆரம்பத்தில் தமிழரசுக்கட்சி சார்பில் அரசியலுக்குள் நுழைந்தபோது தமிழ் பெண்கள் அனைவரும் அவரை தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் வடிவமாகவே மனத்தில் வைத்து பார்த்தார்கள்.

ஆனால் இன்று அவரின் நிலை தலைகீழாக மாறியதையிட்டு அதிர்ச்சியடைந்திருக்கின்றனர்.

பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தற்போது தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக மேற்கொண்டு வரும் ஒப்பீட்டு அரசியல் தமிழ் மக்கள் மத்தியில் கடும் விசனத்தையும் அவரின் உண்மை முகத்தையும் வெளிப்படுத்தி நிற்கின்றது.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை தகமையற்றவர்களுடன் ஒப்பிட்டு
விமர்ச்சிக்கும் தகுதி பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனுக்கு இல்லை.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை மலினப்படுத்தும் விதமாகசெயற்பட ஆரம்பித்திருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்
சிறீதரனுக்கு இம்முறை தேர்தலில் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை ஆத்மாத்தமாக நேசிக்கும் தமிழ் பெண்கள் அனைவரும் நிச்சியம் சரியான பாடம் புகட்டுவார்கள் என்றார்.

Post a Comment

Previous Post Next Post