நீர்வேலியின் தீயணைப்பு வாகனம் விபத்து!! -சில்லு காற்றுப் போனதால் விபரீதம்: இருவரின் நிலை கவலைக்கிடம்- - Yarl Thinakkural

நீர்வேலியின் தீயணைப்பு வாகனம் விபத்து!! -சில்லு காற்றுப் போனதால் விபரீதம்: இருவரின் நிலை கவலைக்கிடம்-

யாழ்.மாநகர சபையில் இருந்து பருத்தித்துறைக்குச் சென்ற தீயணைப்பு வாகனம் சற்று முன் நீர்வேலிப் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. 

நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரிக்கு முன்பாக இவ்விபத்து நடந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த தீயணைப்பு வாகனத்திற்ன் முன் பகுதி சில்லு திடீரென காற்றுப் போன காரணத்தினால் வாகனம் வீதியை விட்டு விலகி தோட்டத்திற்குள் பாய்ந்துள்ளது. 

இச் சம்பவத்தில் தீயணைப்பு பணியில் ஈடுபடுபவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மயக்கமடைந்த நிலையில் வீதியோரமாக இருந்த வர் நோயாளிகள் காவு வண்டியின் உதவியுடன் வைத்திய சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். 

Post a Comment

Previous Post Next Post