மஹிந்தவின் அதிரடி உத்தரவு!! -யாழில் புதுப் பொலிவு பெற்ற பாரதியார்- - Yarl Thinakkural

மஹிந்தவின் அதிரடி உத்தரவு!! -யாழில் புதுப் பொலிவு பெற்ற பாரதியார்-

யாழில் தேர்தல் பிரச்சார சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு அசிங்கப்படுத்தப்பட்ட பாரதியார் சிலை சுவரொட்டிகள் அகற்றப்பட்டு, வர்ணம் பூசப்பட்டு புதப் பொலிவுடன் காட்சியளிக்கின்றது. 

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அதிரடி உத்தரவுக்கு அமையவே அசிங்கப்படுத்தப்பட்ட பாரதியார் சிலைக்கு விமோசனம் கொடுக்கப்பட்டள்ளது. 

கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ் நல்லுர் அரசடிப் பகுதியில் உள்ள பாரதியாருடைய சிலையை சுற்றி பொதுஜன பரமுனவின் தேர்தல் பிரச்சார சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. பொறுப்பற்ற விதத்தில் அங்கு ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் பொது மக்களால் கிளிக்கப்பட்டது. 

இருப்பினும் மீண்டும் அதே சுவரொட்டிகள் பாரதியார் சிலையில் ஒட்டப்பட்டிருந்தன. பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் புகைப்படம் பொறுப்பிக்கப்பட்ட குறித்த சுவரொட்டிகள் பாரதியார் சிலை மீது ஒட்டப்பட்ட விடயம் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. 

இதனையடுத்து அங்கு ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் அனைத்தும் உடனடியாக அகற்றப்பட்டு, வர்ணம் பூசப்பட வேண்டும் என்று பிரதமர் அதிரடி உத்தரவினை பிறப்பித்திருந்தார். இதன்படி சுவரொட்டிகள் அகற்றப்பட்டு, வர்ணம் பூசப்பட்டுள்ளது. 

Post a Comment

Previous Post Next Post