வாகனத்தை நிறுத்திவிட்டு ரயில் முன் பாய்ந்த நபர்!!
வவுனியா - பெரியகாடு பகுதியில் ரயிலுடன் மோதி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று திங்கட்கிழமை காலை நடந்த இவ் விபத்துச் சம்பவத்தில் மன்னார் பிரதேசத்தினை சேர்ந்த 43 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் கெப் ரக வாகனம் ஒன்றில் பயணித்து, வாகனத்தினை நிறுத்தி விட்டு மதவாச்சி தொடக்கம் மன்னார் நோக்கி பயணித்து கொண்டிருந்த தொடரூந்து முன் குதித்து தற்கொலை செய்து கொண்டார் என தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக மன்னார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது என்றும் பொலிஸார் மேலும் தகவல் தெரிவித்துள்ளனர்.
Post a Comment