யாழில் 2 காதல் ஜோடிகளை கடத்திய கும்பல்!! -ஒரு பெண் தப்பி வந்து கொடிகாமம் பொலிஸில் சரண்- - Yarl Thinakkural

யாழில் 2 காதல் ஜோடிகளை கடத்திய கும்பல்!! -ஒரு பெண் தப்பி வந்து கொடிகாமம் பொலிஸில் சரண்-

யாழ்ப்பாணம் வறணி மாசார் பகுதியில் தனிமையில் சந்தித்த காதல் ஜோடிகள் மீது தாக்குதல் நடாத்திய இனந்தொியாத காடையர் கும்பல் ஒன்று இரு காதல் ஜோடிகளையும் கடத்த முயற்சித்த நிலையில் ஒரு பெண் தப்பி ஓடி கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

இந்நிலையில் காடையர் குழுவால் இழுத்து செல்லப்பட்டவர்களை தேடி கொடிகாமம் மற்றும் பருத்துறை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டிருக்கின்றனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, யாழ்.சுன்னாகம் பகுதியை சேர்ந்த இரு பெண்கள் கொடிகாமம் பகுதியை சேர்ந்த இரு

இளைஞர்களை காதலித்துவந்துள்ளனர். இந்நிலையில் குறித்த இரு பெண்களும் இன்று காலை சுன்னாகத்தில் இருந்து கொடிகாமம் பகுதிக்கு சென்றிருக்கின்றனர். அங்கு காத்திருந்து இரு கொடிகாமம் இளைஞர்களுடனும் வறணி மாசார் பகுதிக்கு சென்று அங்கு தனிமையில் இருந்திருக்கின்றனர்.

இதன்போது அங்குவந்த காடையர் குழு ஒன்று காதல் ஜோடிகள் மீது மூர்க்கத்தனமான தாக்குதல் நடாத்தியதுடன், தமது பகுதிக்கு கொண்டு செல்ல முயற்சித்துள்ளது. இதன்போது ஒரு பெண் அவர்களிடமிருந்து தப்பி ஓடி மக்கள் நடமாட்டமுள்ள பகுதிக்கு வந்த நிலையில்

பொதுமக்களால் மீட்கப்பட்டு கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். இந்நிலையில் காடையர் குழுவினால் இழுத்து செல்லப்பட்ட பெண்ணையும், இரு இளைஞர்களையும் தேடி கொடிகாமம், பருத்துறை பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்திருக்கின்றனர்.
Previous Post Next Post