அனலைதீவில் கடற்படை மீது தாக்குதல் நடத்திய கும்பல்!! -தீவு முற்றுகை: போக்குவரத்து தடை- - Yarl Thinakkural

அனலைதீவில் கடற்படை மீது தாக்குதல் நடத்திய கும்பல்!! -தீவு முற்றுகை: போக்குவரத்து தடை-

யாழ்ப்பாணம் அனலைதீவில் கடற்படையினருக்கும் பொது மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறகல் நிலையை அடுத்து கடற்படை மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

குறித்த தாக்குதலில் காயமடைந்த கடற்பபடையிர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கடற்படையினரால் அனலைதீவு முழுவதும் முற்றுகையிடப்பட்டுள்ளதுடன், தீவுக்கான சகல பேக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகல்கள் தெரிவிக்கின்றன. 

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது:-  

நேற்றய தினம் குறித்த தீவில் இரு குழுக்களுக்கிடையில் முறுகல் ஏற்பட்டிருக்கின்றது. இதனை கடற்படையினர் தலையிட்டு தீர்த்துவைத்துள்ளனர். 

மேலும் முறுகலில் சம்மந்தப்பட்டவர்களை கடற்படையினர் விசாரித்தும் உள்ளனர். இதனையடுத்து இன்று காலை நேற்றய முறுகலுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கடற்படை முகாமிற்கு நிறை மதுபோதையில் சென்று கடற்படையினரை தகாத வார்த்தைகளால் பேசியதுடன், கடற்படைமுகாமிற்குள் நுழையவும் முயற்சித்துள்ளார். 

இதனால் கோபமடைந்த கடற்படையினர் அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனையடுத்து குறித்த நபரும் அவருடைய சகாக்கள் இருவரும் அனலைதீவில் உள்ள வைத்தியசாலையில் சிக்சை பெறுவதற்கென சென்றிருக்கின்றனர். 

இதனை அறிந்த கடற்படை அதிகாரி ஒருவரும் சிப்பாய் ஒருவரும் வைத்தியசாலைக்கு சென்ற நிலையில் அங்கு கடற்படை அதிகாரியுடன் சமரசமாக பேசிய குறித்த நபர்கள் கடற்படை 
அதிகாரி வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய நிலையில் பின்தொடர்ந்து சென்று கற்கள், போத்தல்களால் தாக்குதல் நடாத்தியிருக்கின்றனர். 

இதில் கடற்படை அதிகாரியும், சிப்பாயும் காயமடைந்துள்ளனர். தாக்குதல் நடாத்தியவர்கள் தலைமறைவாகியுள்ளனர். குறித்த நபர்களை தேடி தற்போது கடற்படையினர் தீவை முற்றுகையிட்டுள்ளனர். 

தீவுக்குள் நுழையவும், தீவிலிருந்து வெளியேறவும் தடை விதித்திருக்கும் கடற்படையினர் தீவு முழுவதும் சல்லடைபோட்டு தேடுவதாக கூறப்படுகின்றது. 
Previous Post Next Post