சிறுவர்களை கொண்டு தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிய வேட்பாளர்!! -மீசாலையில் நேற்றிரவு சம்பவம்- - Yarl Thinakkural

சிறுவர்களை கொண்டு தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிய வேட்பாளர்!! -மீசாலையில் நேற்றிரவு சம்பவம்-

கொடிகாமம் மீசாலை பகுதியில் தேர்தல் சிறுவர்கள் பிரச்சார சுவரொட்டிகளை ஒட்டித்திரிவதை அவதானித்த அப்பகுதி இளைஞர்கள் அந்த சிறுவர்களை பிடித்து அவர்களுடைய பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.

நேற்று திங்கட்கிழமை இரவு மீசாலைப் பகுதியில் மீன் சின்னத்தில் போட்டியிடும் தமிழ் தேசிய மக்கள் கூட்டணியில் போட்டியிடும் அருந்தவபாலனின் தேர்தல் பிரச்சார சுவரொட்டிகள் சிலரால் ஒட்டப்பட்டது. 

குறித்த சுவரொட்டிகளை ஒட்டியவர்களின் சிறுவர்களும் இருந்ததை அவதானித்த அப்பகுதி இளைஞர்கள் அவர்களை வழிமறித்துள்ளனர். 

வழிமறிக்கப்பட்டவர்களில் சிலர் பதின்ம வயதுடைய சிறுவர்களும் சுவரொட்டிகளுடன் நின்றிருந்ததை இளைஞர்கள் அவதானித்துள்ளனர். 

தமக்கு பணம் தருவதாக கூறியே சுவரொட்டிகளை ஒட்டுவதற்கு அழைத்துவரப்பட்டதாக அந்த சிறுவர்கள் கூறியுள்ளனர். 

இதனையடுத்து அந்த சிறுவர்களை அழைத்துச் சென்ற இளைஞர்கள் அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைத்துள்ளனர். 

Post a Comment

Previous Post Next Post