யாழ் மாநகர சபை முன் விபத்து!! -தப்பியோடிய ஆட்டோ சாரதியை துரத்தி பிடித்த இளைஞர்கள்- - Yarl Thinakkural

யாழ் மாநகர சபை முன் விபத்து!! -தப்பியோடிய ஆட்டோ சாரதியை துரத்தி பிடித்த இளைஞர்கள்-

யாழ் மாநகரசபை முன்னால் விபத்தினை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய முச்சக்கரவண்டி சாரதியை அங்கிருந்த இளைஞர்கள் துரத்தி பிடித்துள்ளனர்.

யாழ் நல்லூர் மாநகரசபை முன்னால் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.20 மணிக்கு மோட்டார் சைக்கிளும் முச்சக்கரவண்டியும் விபத்துக்குள்ளாகியது.

இவ்விபத்தின் போது மோட்டார்சைக்கிளில் சென்ற நபர் தூக்கி வீசப்பட்டு விதியில் விழுந்தார்.

முச்சக்கரவண்டி சாரதி தப்பித்து செல்ல முயன்ற போது விபத்துக்குள்ளாகிய இளைஞன் கால் நடக்கமுடியாமல் ஒடிச்சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு முச்சக்கரவண்டியைப்பிடித்து முச்சக்கரவண்டியேலே சென்றுவிட்டார்.

மோட்டார் சைக்கிள் யாழ் மாநகரசபை முன்னால் அமைந்தள்ள பருத்திதுறை வீதியின் நடுவே விட்டுச்சென்ற படி உள்ளது.
Previous Post Next Post