யாழில் ஒருவருக்கு கொரோனா உறுதியானது!! - Yarl Thinakkural

யாழில் ஒருவருக்கு கொரோனா உறுதியானது!!


வியத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

யாழ் போதான வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடந்த பரிசோதனையில் இது உறுதியானது என்று வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

இன்று 20பேருக்கான பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.

போதனா வைத்தியசாலை விடுதிகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் - 3 பேர்.

போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் பரிசோதிக்கப்பட்டவர்கள் - 4 பேர்.

பொது வைத்தியசாலை வவுனியா - ஒருவர்.

மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலக பிரிவு -11 பேர்.

விடத்தல்பளை தனிமைப்படுத்தல் மையம் இருந்து ஒருவருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது

இதில் விடத்தைபளை தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த  ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

ஏனையவர்களுக்கு தொற்று இல்லை என்று பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post