கிளிநொச்சி கண்டாவளை பகுதியில் உள்ள இராணுவ முகாம் முன்பாக மின் ஆளி வடிவான வெடிபொருளினை மீட்ட இராணுவத்தினர் அதனை வெடிக்கவைத்துள்ளனர்.
கிளிநொச்சி கண்டாவளை பிதேச செயலகத்திற்கு உட்பட்ட பரந்தன் முல்லைத்தீவு வீதியில் அமைந்துள்ள இராணுவ முகாமிற்கு முன்பாக மர்மப்பபொதி ஒன்று இருப்பதனை இராணுவத்தினர் அவதானித்துள்ளனர்.
இது குறித்த இராணுவத்தினால் கிளிநொச்சி பொலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவம் இடத்திற்கு பொலிஸார் தடயவியல் பிரிவு பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
அவர்களைத் தொடர்ந்து குண்டு செயலிழக்க வைக்கும் இராணுவப் பிரிவினரும் வந்து சேர்ந்தனர்.
அங்கிருந்த மர்மப் பொருள் தொடர்பில் ஆராய்வுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் வீதியால் செல்லும் பொது மக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு குறித்த மர்ம பொருள் மீட்கப்பட்டு இராணுவ முகாமிற்குள் கொண்டு செல்லப்பட்டது.
இராணுவ முகாமிற்குள் வைத்து அந்த மர்மப் பொருள் தொடர்பில் ஆராய்வுகளை செய்த இராணுவம் அது பொருள் மின் ஆழி வடிவில் பொருத்தப்பட்டுள்ள வெடிபொருள் என்பதனை கண்டறிந்து அதனை பாதுகாப்பான முறையில் வெடிக்கச்செய்துள்ளனர்.
Post a Comment