கரவெட்டியில் பெண் தலமைத்துவ குடும்பத்திற்கு புதிய வீடு!! -இராணுவத்தால் அடிக்கல் நாட்டப்பட்டது- - Yarl Thinakkural

கரவெட்டியில் பெண் தலமைத்துவ குடும்பத்திற்கு புதிய வீடு!! -இராணுவத்தால் அடிக்கல் நாட்டப்பட்டது-

யாழ்ப்பாண மாவட்டத்தில் வீடு அற்ற வறியகுடும்பங்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இராணுவத்தினரால் பல்வேறு வீடுகள் அமைத்துக்கொடுக்கப்பட்டு வருகின்றது.

இதன் ஒரு அங்கமாக இன்று கரணவாய் வடக்கு கரவெட்டி கொற்றாவத்தை ஜே.360 கிராம சேவகர் பிரிவில் கணவனை இழந்து மூன்று பிள்ளைகளுடன் வசித்து வரும் பெண்தலைமைத்துவ குடும்பத்திற்கான வீட்டிற்கான அடிக்கலினை யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய நாட்டி வைத்தார்.

குறித்த அடிக்கல் நாட்டும் நிகழ்வில் இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் அப்பகுதியின் கிராமசேவகர் உள்ளிட்ட பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Post a Comment

Previous Post Next Post