பண மோசடி: பெய்யான குற்றச்சாட்டு!! -சட்டம் பாயும்: எச்சரித்த சுமந்திரன்- - Yarl Thinakkural

பண மோசடி: பெய்யான குற்றச்சாட்டு!! -சட்டம் பாயும்: எச்சரித்த சுமந்திரன்-

கனடாவில் இருந்து 212 மில்லியன் ரூபா புணர்வாழ்விற்கான என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு அபாண்டமான பெய் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

பெய் குற்றச்சாட்டை பெது வெளியில் வைத்த விமலேஸ்வரி என்பர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:- 

இலங்கை தமிழரசு கட்சியின் மகளீர் அணி செலாயர் விமலேஸ்வரி என்பவர் என் மீது அபாண்டமாக குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்துள்ளார். 

அதாவது கனடா நாட்டில் இருந்து 212 மில்லியன் ரூபா புணர்வாழ்விற்காக என்னிடம் கொடுக்கப்பட்ட நிதிக்கு என்ன நடந்தது என்பதை நான் செல்ல வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். 

தேர்தல் காலத்திலே அவராகவோ, அல்லது வேறு யாருடைய துண்டுதலினாலேயோ அவர் சுமத்தியுள்ள பொய்யான குற்றச்சாட்டே இது. புணர்வாழ்வுக்கு என்று எந்த பணமும், எந்த காலத்திலும் என்னிடத்தில் கொடுக்கப்படவில்லை. 

விமலேஸ்வரி தேர்தல் நேரத்திலே இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது விசித்திரமானது. ஆவர் எனது மத்திய செயற்குழு அங்கத்தவராக இருந்து கொண்டு இவ்வாறான பொய் குற்றச்சாட்டை திறந்த வெளியில் சென்று முன்வைத்துள்ளமைக்கு நிச்சையமாக வேறு காரணம் இருக்கும். அவருக்கு எதிராக முழுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
கட்சி தலைவர் மற்றும் பொது செயலாளரிடத்தில் இக் குற்றச்சாட்டு தொடர்பில் நான் தெரியப்படுத்தியுள்ளேன். இவ்விடயம் தொடர்பில் நேற்று சில பேச்சுக்களும் எம் மத்தியில் நடத்தப்பட்டது. விமலேஸ்வரி உடனடியாக கட்சி உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. 

Post a Comment

Previous Post Next Post