அதிகாலை கனகராயன்குளத்தில் கோர விபத்து!! -யாழினை சேர்ந்த இருவர் சம்பவ இடத்தில் பலி- - Yarl Thinakkural

அதிகாலை கனகராயன்குளத்தில் கோர விபத்து!! -யாழினை சேர்ந்த இருவர் சம்பவ இடத்தில் பலி-

வவுனியா கனகராயன் குளப் பகுதியில் இன்று காலை நடந்த விபத்துச் சம்பவத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 

உயிரிழந்த இருவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அதில் ஒருவர் தமிழ் பொலிஸ் அதிகாரி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இருவரும் மட்டக்களப்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த வேளை கனகராயன்குளப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர் என்று கனகராயன்குளப் பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த விபத்தில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கொஸ்தாபிள் ஜெயமூர்த்தி நிசாந்த், மற்றும் பலாலி வீதி யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த கிசான் யனு{டன் ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளதாக கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

Previous Post Next Post