இரும்பில் ஆணி பொருத்திய ஆயுதங்கள்!! -இந்திய இராணுவத்தை தாக்கும் சீனா- - Yarl Thinakkural

இரும்பில் ஆணி பொருத்திய ஆயுதங்கள்!! -இந்திய இராணுவத்தை தாக்கும் சீனா-

சீனா ஆணி பதித்த இரும்பு ஆயுதங்களை பயன்படுத்தி இந்திய இராணுவத்தினரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லடாக்கில் இரண்டு நாட்கள் முன் நடந்த சண்டையில் 20 இந்திய இராணுவ வீரர்கள் உயிரிழந்திருந்தனர். இந்த சண்டை லடாக்கில் இருக்கும் கல்வான் பகுதியில் நடந்தது.

மொத்தம் 8 மணி நேரம் நடந்த இந்த சண்டையில், இரண்டு நாடுகளும் துப்பாக்கிகள், குண்டுகள் எதையும் பயன்படுத்தவில்லை

முழுக்க முழுக்க கம்பிகள், குச்சிகள், இரும்பு ராடுகள், கற்களை வைத்து தாக்கியுள்ளனர். இதில்தான் இந்திய வீரர்கள் 20 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த தாக்குதலை நிகழ்த்துவதற்காக சீன இராணுவம் முழுக்க முழுக்க தயாராகி வந்து இருக்கிறது இதில் இருந்தே தெரிகிறது.

Post a Comment

Previous Post Next Post