காணாமல் போன மல்லாவி வர்த்தகர்!! -வவுனியா சென்ற போது சம்பவம்- - Yarl Thinakkural

காணாமல் போன மல்லாவி வர்த்தகர்!! -வவுனியா சென்ற போது சம்பவம்-

மல்லாவியில் இருந்து வவுனியா சென்ற பிரபல வர்தகரும் 2 பிள்ளைகளின் தந்தையுமான நபர் ஒருவர் கடந்த 3ம் திகதி தொடக்கம் காணவில்லை என்று அவருடைய மனைவி மல்லாவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். 

முல்லைத்தீவு மாவட்டம் பாலிநகர் வவுனிக்குளம் பகுதியில் வசித்து வரும் மூன்று பிள்ளைகளின் தந்தையான பிரபா என அழைக்கப்படும் பாலசுந்தரராஜா பிரபாகரன் என்பவர் கடந்த புதன்கிழமை 6ம் திகதி மல்லாவியிலிருந்து 
வவுனியாவிற்கு செல்வதாக தெரிவித்து சென்ற நிலையில் இது வரையில் வீடு திரும்பவில்லை இதனையடுத்து அவரின் மனைவியினால் அவரை காணவில்லையேன தெரிவித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

குறித்த நபர் இறுதியாக வெள்ளை நிறத்தில் கறுப்பு நிற புள்ளி இடப்பட்ட மேலாடையும் கறுப்பு நிற ஜீன்ஸ்சும் அணிந்திருந்தார் என அவரின் மனைவி பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் கூறப்பட்டது. 

இவரை யாரேனும் கண்டால் 076 – 6602122 , 077 – 8027498 , 077 – 8860893 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்குமாறு அவரின் மனைவி வேண்டுகொள் விடுத்துள்ளார்.

Previous Post Next Post