வல்லை குண்டு வெடிப்பு!! -நீர்வேலி இளைஞர் கைது- - Yarl Thinakkural

வல்லை குண்டு வெடிப்பு!! -நீர்வேலி இளைஞர் கைது-

பருத்தித்துறை வீதி வல்லைப் பகுதி இராணுவ முகாமிற்கு அருகில் குண்டு வெத்த சம்பவம் தொடர்பில் இளைஞர் ஒருவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

கடந்த 12 ஆம் திகதி வல்லை இராணுவ முகாமுக்கு அண்மையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றது.

இதில் இராணுவ சிப்பாய் ஒருவருக்கு சிறு காயம் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் நீர்வேலிப் பகுதியில் வசிக்கும் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் கோப்பாய் பொலிஸாரால் இன்று செவ்வாய் கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post