யாழில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது!! - Yarl Thinakkural

யாழில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது!!

யாழில் இன்று நடந்த பி.சி.ஆர் பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது என்று யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். 

பூவரசங்குளம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ள ஒருவருக்கே இத்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தகவல் தெரிவித்துள்ளார். 
      
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 86 பேருக்கு கொரோனாத் தொற்றுப் பரிசோதனைகள் நடாத்தப்பட்டுள்ளது. 

பூவரசங்குளம் தனிமைப்படுத்தல் மையத்தைச் சேர்ந்த 46 பேர், விடத்தல்பளை  தனிமைப்படுத்தல் மையத்தைச் சேர்ந்த 19 பேர், பம்பைமடு தனிமைப்படுத்தல் மையத்தைச் சேர்ந்த 6 பேர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வெளி நோயாளர் பிரிவில் பரிசோதிக்கப்பட்ட 4 பேர், முல்லைத்தீவு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 5 பேர், இரணைமடு தனிமைப்படுத்தல் மையத்தைச் சேர்ந்த 3 பேர், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர், ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர், காங்கேசன்துறை கடற்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் ஆகியோரே இவ்வாறு பரிசோதனைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.   

Post a Comment

Previous Post Next Post