கொலையான அமெரிக்க கறுப்பினர்தவருக்கு கொரோனா!! -பிரேத பரிசோதனையில் வெளிவந்த தகவல்- - Yarl Thinakkural

கொலையான அமெரிக்க கறுப்பினர்தவருக்கு கொரோனா!! -பிரேத பரிசோதனையில் வெளிவந்த தகவல்-

பொலிஸாரால் கொலை செய்யப்பட்ட அமெரிக்க கறுப்பின பிரஜையான ஜோர்ஜ் ஃப்ளோயிட் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

அவரின் சடலத்தை பிரேதபரிசோதனைக்கு உட்படுத்திய போது இந்த விடயம் தெரியவந்துள்ளது என்று சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அமெரிக்க காவற்துறை அதிகாரி ஒருவரால் அண்மையில் ஜோர்ஜ் ஃப்ளோயிட் கொலை செய்யப்பட்டிருந்தார்.

குறித்த சம்பவத்தின் போது அங்கிருந்த 3 காவற்துறை அதிகாரிகள் மீது முதல் முறையாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலைக்கு உடந்தையாக இருந்ததாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Previous Post Next Post