காதல் தோல்வி: தீமூட்டி தற்கொலை செய்த யுவதி!! -புத்தூரில் சம்பவம்- - Yarl Thinakkural

காதல் தோல்வி: தீமூட்டி தற்கொலை செய்த யுவதி!! -புத்தூரில் சம்பவம்-

யாழ்.ஆவரங்கால் பகுதியை சேர்ந்த யுவதி காதல் தோல்வியால் தனக்கு தாத்தானே தீ மூட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஆவரங்கால் கிழக்கு புத்தூர் பகுதியை சேர்ந்த உலகேந்திரம் விதுஷிகா (வயது 23) என்ற யுவதியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

குறித்த யுவதி ஒரு வருடமாக இளைஞன் ஒருவரை காதலித்து வந்துள்ளார். தனது காதலனிடம் தன்னை திருமணம் செய்யுமாறு கோரி வந்துள்ளார்.

அதற்கு குறித்த இளைஞன் பெற்றோரை கேட்டு சொல்கின்றேன் என்று கூறி தொடர்பை துண்டித்துள்ளார். அதன் பின்னர் ஒரு மாதமாக இளைஞன் தொடர்பு கொள்ளாமல் தவிர்த்து வந்துள்ளார். இதனால் மன விரக்தி அடைந்த யுவதி கடந்த 21 ஆம் திகதி இரவு வீட்டில் தனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீமூட்டியுள்ளார்.

தீக்காயத்திற்குள்ளான யுவதி உடனடியாக அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அங்கு சிகிச்சை பெற்றுவந்த அவர் நேற்று காலை சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். இந்த இறப்பு தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். 

Post a Comment

Previous Post Next Post